கதைச் சுருக்கம்
முதல் பாதி முழுக்க யூகிக்க முடிந்த திரைக்கதையுடன் பயணிக்கும் படம் இரண்டாம் பாதில் இலக்கு நோக்கி சீராக நகர்கிறது. படத்தின் பலம் என்று பார்த்தால் ஸ்ரேயன், முதல் படத்தில் எந்த குறையும் சொல்ல தேன்றவில்லை. நல்ல உய்ரம், சரியான வசனங்களை உச்சரிக்கிறார் பாவனைகளும் அருமை. அடுத்த படத்தில் இன்னும் எதிர் பார்க்கலாம்.
படத்தில் இடம் பெறும் இடைவேளை காட்சிகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.இரண்டாம் பாதி சில நகைச்சுவைக் காட்சிகளுடன் நகர்கிறது.முதல் பாதியில் வரும் சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் தயாரிப்பில் எந்த சமரசமும் செய்யாமல் எடுத்திருக்கிறார்கள்.
பலவீனம் என்று பார்த்தால், ஆதிகால கதை தான். இதே போல் கதையை எல்லா பிராந்தியத்திலும் அடித்து துவைத்து விட்டார்கள் அதில் புதிதாக தர என்னதான் இருக்கிறதோ???அதேபோல் எல்லா காட்சிகளையும் யூகிக்க முடிந்தது இதனால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட கமர்ஷியல் அம்சங்களும் படத்தை பாதிக்கவே செய்கின்றன. இயக்குநர் வாசுவின் பக்குவமில்லாத இயக்கம் படத்தை பெரிதும் பாத்தித்திருக்கிறது. எனினும் ஸ்ரேயனை அடுத்த படத்தில் பார்த்து கொள்ளலாம்.
பஸ்தி - காதல் + மோதல்













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.