கதைச் சுருக்கம்
சிவகார்த்திகேயன் விட்டுவிட்டு வந்த சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மா.கா.பா ஆனந்த் பெரிய திரையில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாது ஹீரோவாக நடித்தார். இப்போது அட்டி என்ற பெயரில் தயாராகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். அர்ஜூன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி பாபு இசை அமைக்கிறார்.
இயக்குனர் சுராஜிடம், அலெக்ஸ் பாண்டியன், மாப்பிள்ளை படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜயபாஸ்கர் இயக்குகிறார். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் நண்பர்கள் சிலர் இணைந்து மினரல் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஆனந்துக்கு வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதும்தான் கதை. முழு படமும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் படமாக்கப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கு மட்டும் அவுட்டோர் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் விஜய் பாஸ்கர்.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.