கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். அவருக்கு எல்லா விதமான சண்டை கற்றுத் தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் பயிற்சியாளராக சரத்குமார் நடிக்கிறார். சண்டை காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலில் என்னும் லண்டன் அழகியை வைத்து படமாக்கியுள்ளனர்.
ஒளிப்பதிவு - வாசு, இசை : நாகேஷ் - சங்கர், எடிட்டிங் - ஹரி. இயக்கி இருப்பவர் சமுத்திரம் ..இவர் தெலுங்கில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு - ஓமிக்ஸ் கிரியேசன்ஸ்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரியாமணி தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக மிகுந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார். காஞ்சனா, சென்னையில் ஒரு நாள் படங்களுக்கு பிறகு சரத்குமாருக்கு இப்படம் மற்றுமொரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இயக்குனர் சமுத்திரம்.
Advertisement
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.