கதைச் சுருக்கம்
ரேட்டிங் - 2.5/5
கல்கி விமர்சனம்
கோவிலூர் ஜமீன்தார் பிரபு, தம் தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் மூவரையும் பாசமலர்களாக வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் தம் அப்பாவின் மரணத்துக்கு பிரபுதான் காரணம் என்று மூன்று தங்கைகளும் அவரை ஒதுக்கிவைக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் மகள் ஹன்சிகா சென்னையில் படிக்கிறார். கூட்டத்துக்கு ஆள் பிடித்து விடும் விஷால் ஹன்சிகாவை காதலிக்கிறார். சந்தானம் இவர்கள் காதலைப் பிரிக்கிறார்.
பிரபுவும் துளசியும் பிரிந்து வாழ்கின்றனர். அம்மாவான துளசி ஆசைப்படி அப்பாவைத் தேடி மதுரை செல்கிறார் விஷால். அங்கு தம் தம்பிகள் வைபவ், சதீஷ், அப்பா பிரபு மூவரையும் கண்டுபிடிக்கிறார். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது.
பிரபுவின் ஆலோசனைப்படி அத்தை மகள்கள் மூன்று பேரையும் கடத்தி தாலி கட்டிவிட்டால் குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும் என்று விஷால், வைபவ், சதீஷ் மூவரும் கடத்துகிறார். ஆனால் மகளை அல்ல, அத்தைகளைக் கடத்தி விடுகிறார்கள்.
அந்தப் பழி வில்லன்மீது விழ, ரம்யாகிருஷ்ணன் அவரை எதிர்த்து அரசியலில் போட்டியிடுகிறார். ஹன்சிகாவைப் பந்தயமாக வைத்து தேர்தலில் போட்டியிடும் அத்தைக்கு துணையாக விஷால் நின்று எதிரிகளின் கொட்டத்தை அழித்து ஹன்சிகாவை கைபிடிக்கிறார். இதுதான் கதை.
சந்தானம் வரும்போதெல்லாம் தியேட்டரில் கைதட்டல். ஊட்டியில் ஆரம்பிக்கும் கதையில் அரசியல் கூட்டங்களுக்கு வேணுங்கிற அளவுக்கு ஆள் பிடித்துதரும் விஷால் படம் முழுவதும் பரபரவென பட்டாசு வெடிக்கிறார். ஹன்சிகா ஊட்டி ஆப்பிள் போல பளபளக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழா என்ற புதிய இசை அமைப்பாளர் மீட்டிய இசை பரவாயில்லை. பாடல்களை ஆதி எழுதியுள்ளார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கலர்புல், ஆர்ட் இயக்குநர் சண்முகம் அசத்தல்! ஷோபியின் நடனம் படு துள்ளல்!
பண்டிகை சீசனுக்கு மக்களுக்கு என்ன தேவையோ அதைக் குறைவில்லாமல் தந்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
ஆம்பள - கலகல

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!