கதைச் சுருக்கம்
வாய் பேச முடியாத , காது கேளாத மாற்றுத்திறனாளி ., களவாணி திறமைசாலியாக முனிஷ் காந்த் - ராமதாஸ் , நகைக் கடை பெரிய மனிதராக மதுசூதனன் , சைலண்ட் - வய லண்ட் சைக்கிக் வில்லனாக உதயபானு மகேஸ்வரன் ,சுஜாதா , ரத்தினசாமி , ஹலோ கந்தசாமி எல்லோரும் நச்சென்று நடித்திருப்பதே சில இடங்களில் ஒ வர்டோ ஸாகி விடுவது பலவீனம். . இவர்கள் எல்லோரையும் காட்டிலும் பேயாமல் (பேசாமல்... ) பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை முழுங்கிவிட்டு அமைதியாக இருக்கும் பிள்ளையார் மற்றும் மூஞ்சு எலி சிலை ஹாஸ்யம் , சுவாரஸ்யம்!
ஆர்.பி .குரு தேவின் கிராமியமணங்கமழும் ஒளிப்பதிவு , சான்ரோலனின் அதிரடி இசை , லியோ ஜான்பாலின் இன்னும் கத்திரி பட்டைத் தீட்டப்பட வேண்டிய படத்தொகுப்பு , ஏ. கோபி ஆனந்தின் உள் அறைகள் நிரம்பிய மூஞ்சூறு, பிள்ளையார் சிலை செட்டுகள் ... உள்ளிட்ட ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகள் ஜி. மணிகண்டனின் எழுத்து , இயக்கத்தில் ஆங்காங்கே இருக்கும் சிரிப்பு வெடி களுக்காக 144 படத்தை உயர்த்திப் பிடிக்கின்றன.
143க்கு (காதலுக்கு...) இப்படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லாமல் , அதற்கு 144 போட்டுவிட்டது போல் , நல்ல வேளை , களவாணித்தனம் தான் கான்செப்ட் என, இப்பட இயக்குனர் , காமெடிக்கும் 144 போடாமல் விட்டதால் , 144 படத்தை ஒரளவிற்காவது ரசிக்க , சிரிக்க முடிகிறது!
ஒரு வரியில் சொல்வதென்றால் ., ஒன் பார்ட்டி போர் (144) _ஓ.கே. நாட் போர்!













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.