மாற்று இதயத்துடன் மாரத்தான் ஓடலாம்
இதய செயலிழப்பிற்கு நிரந்தர தீர்வு, இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே.
நோயாளியின் வயது, உயரம், உடல் எடைக்கு தகுந்த மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் தானமாகக் கிடைத்தால் பொருத்தலாம்.
ஒரு நாளை தள்ளுவதே போராட்டமாக இருந்த வாழ்க்கை, மாற்று இதயம் பொருத்தியவுடன் ஆரோக்கியமாக உணரச் செய்யும்.
மாற்று இதயம் பொருத்திய பலர், மாரத்தான் ஓடுவது, சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஐ.டி., துறையில் இருப்பவர்கள் இயல்பாக வேலைக்கு செல்கின்றனர்.
ஐம்பது வயதிற்கு மேல் அனைவருக்கும் 500 கிராம், 600 கிராம் எடையில் ஒரே மாதிரி தான் இதயம் இருக்கும்.
1 வயது குழந்தைக்கு மாற்று இதயம் தேவைப்பட்டால், அதே வயதில் உள்ளவரின் இதயம் கிடைக்காவிடில், 8 வயது வரையுள்ள குழந்தைகளின் இதயம் தானமாகக் கிடைத்தால் பொருத்தலாம்.