இன்று உலக முதியோர் தினம்...

01-அக்-2024

முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் இந்த தினம் உலகெங்கும் அறிவிக்கப்பட்டது.

01-அக்-2024

60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் 2050ல் முதியோர் எண்ணிக்கை 150 கோடியாக இருக்கும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

01-அக்-2024

முதியவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றவர்கள். முக்கிய பிரச்னைகளில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் போது அது நன்மையை பயக்கும்.

01-அக்-2024

முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வது, வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது அவசியம்.

01-அக்-2024

ஒரு குடும்பத்தில் மூத்தவர்கள் இருப்பது அந்த குடும்பத்திற்கே ஒரு வெளிச்சம் போன்றது என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும்.

01-அக்-2024

கண்ணியத்துடன் முதுமை மற்றும் உலகளவில் வயதானவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

01-அக்-2024

குழந்தைப் பருவம் போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து, அவர்களை மகிழ்விப்போம், மதிப்போம்.

01-அக்-2024