இரவு நேரத்தில் மட்டும் ஏன் தாமதமாக சாப்பிடக் கூடாது?

14-பிப்-2025

தூக்கம் கெடுதல்... தாமதமாக சாப்பிடும்போது தூங்குவதிலும் தாமதம் உண்டாகக்கூடும். இது தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவில் குழப்பமான கனவுகள் உண்டாக வழிவகுக்கும்.

14-பிப்-2025

மோசமான செரிமானம்... தாமதமாக இரவு உணவை உண்பது, இரைப்பை பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. உணவு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதே இதற்குக் காரணம்.

14-பிப்-2025

எடை அதிகரிப்பு... இரவு நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இது பகலில் உள்ளதைப் போன்று கலோரிகளை எரிப்பதில் பயனுள்ளதாக இல்லாததால், உடல் எடை அதிகரிக்கும்.

14-பிப்-2025

மன ஆரோக்கியத்தின் மீதான விளைவு... சரியாக தூங்காத போது, மறுதினம் எரிச்சல் மற்றும் மோசமான மனநிலையுடன் எழுந்திருக்க வாய்ப்புள்ளதால், மனச்சோர்வு, பதட்டம் ஏற்படக்கூடும்.

14-பிப்-2025

ரத்த அழுத்தம் அதிகரிப்பு... இரவில் தாமதமாக சாப்பிட்டு விட்டு தூங்குவதை தொடர்ச்சியாக செய்யும் போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்புக்கு வழிவகுக்கும்.

14-பிப்-2025

படுக்கைக்கு செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. இரவு 9 மணிக்கு மேல் எந்த உணவையும் சாப்பிடுவது நல்லதல்ல என்பது டயட்டீசியன்களின் அட்வைஸ்.

14-பிப்-2025