ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் என்றால் என்ன?
தற்போது பலருக்கும் தீவிரமான பாக்டீரியா தொற்று ஏற்படும் போது, எந்த ஆன்டிபயாடிக் மருந்துகளும் தொற்றை குணப்படுவதில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
தொற்று ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், தற்போது நடைமுறையில் உள்ள எந்த ஆன்டிபயாடிக் மருந்தும், பாக்டீரியா தொற்றை அழிப்பதில்லை என கூறப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளை மக்கள் கட்டுப்பாடில்லாமல் உபயோகிப்பது தான் இந்த நிலைக்கு காரணம்.
காய்ச்சல், சளி, இருமல் என்று லேசாக பாதிப்பு தலைகாட்டினாலே, உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம்.
இப்படி தேவையே இல்லாமல், ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டதால், கிருமிகள் அதை எதிர்க்கும் திறனை பெற்று விட்டன.
எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மருந்துகளை கட்டுப்பாடில்லாமல் உபயோகிப்பது தான் இந்த நிலைக்கு காரணம்.
இதை ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் என அழைக்கிறோம்.
டாக்டரின் பரிந்துரை இல்லாமல், ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடக் கூடாது. எனக்கு ஆன்டிபயாடிக் கொடுங்கள் என்று டாக்டரை வற்புறுத்தக் கூடாது.