குழந்தைகள் தவறான வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம்?
உங்கள் குழந்தை முதல் முறையாக ஒரு மோசமான அல்லது புண்படுத்தும் வார்த்தையை சொல்லும்போது, நீங்கள் அதிர்ச்சி மற்றும் கோபமடையலாம்.
ஆனால் நீங்கள் அந்த வார்த்தைக்கு தீவிர எதிர்வினையாற்றுவது குழந்தையை குழப்பமடைய செய்யும். அந்த நிலையை அமைதியாக கையாள்வதை உறுதிப்படுத்துங்கள்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு இதுபோன்ற வார்த்தைகளின் அர்த்தம் கூட தெரியாது. எனவே, அது ஏன் மோசமான சொல் என விளக்கி புரிய வைக்க முயற்சிக்கவும்.
உங்கள் குழந்தை பிறரிடம் கெட்ட அல்லது ஆபாசமான வார்த்தைகளை பேசினால், அர்த்தம் அவர்களுக்கு தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கவும்.
ஒருவேளை தங்களின் கோபத்தை வெளிப்படுத்த கெட்ட வார்த்தையை சொல்கிறார்கள் என்றால், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வழிகளைக் கண்டுபிடிக்க கற்றுக்கொடுங்கள்.
வன்முறை அல்லது ஆபாசமான வார்த்தைகள் பேசுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கறாராக சொல்லுங்கள்.
உங்கள் குழந்தை பெரியவர்கள் அல்லது வேறு யாரிடமாவது கெட்ட வார்த்தைகளை பேசி இருந்தால் அவர்களிடம் குழந்தை மன்னிப்பு கேட்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
மோசமான வார்த்தைகள் பேச தெரியாத குழந்தைகள் கூட உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடும்.
எனவே, குறைந்தபட்சமாக குழந்தையின் முன்னிலையில் நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களோ கெட்ட வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தல் நலம்.