கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்ற தர்பூசணி மில்க் ஷேக் இதோ !

02-ஏப்-2026

தேவையானப் பொருட்கள்: தர்பூசணி - அரை பழம், பால் - அரை லிட்டர், சர்க்கரை - தேவையான அளவு, பாதாம் பிசின் - 2 டீஸ்பூன், சப்ஜா விதை - 1 டீஸ்பூன்.

02-ஏப்-2026

தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி கொள்ளவும்.

02-ஏப்-2026

அதனுடன், காய்ச்சி ஆற வைத்த பால், பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளை சேர்த்து நன்றாக கலக்கினால், தர்பூசணி மிலக் ஷேக் ரெடி.

02-ஏப்-2026

இதை அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக பரிமாறலாம்.

02-ஏப்-2026

இதில் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியை சேர்த்தால் சுவை மேலும் அள்ளும்; குழந்தைகளும் ஆர்வமுடன் விரும்பி பருகுவர்.

02-ஏப்-2026

இதுபோன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயாரிக்கும் போது, சுவையாக இருப்பது மட்டுமின்றி, சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.

02-ஏப்-2026

விருப்பப்பட்டால் இதில் சில ஸ்ட்ராபெரி பழங்களையும் சேர்க்கலாம்.

02-ஏப்-2026