கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா....
அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் கோவாவில் கடற்கரைகளுக்கு பஞ்சமில்லை.
1961க்கு முன் வரை போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தில் இருந்த கோவாவில் பாகா, கண்டோலிம், பாலோலெம் என 21 கடற்கரைகளின் பெயர்கள் நீண்டு செல்லும்.
வடக்கு கோவாவில் பாகா, கலாங்கட் கடற்கரைகள் பிரமிக்க வைக்கும். தெற்கு கோவாவில் பாலோலெம், பட்டர்பிளை கடற்கரைகள் அழகூட்டும்.
கடற்கரைகளின் நீர் விளையாட்டுகள், இந்திய, போர்ச்சுக்கீசிய கலாச்சார செறிவு மிகுந்த கட்டடங்கள், பாரம்பரிய சர்ச், கோட்டை, ஆன்மிகத்திற்கு கோயில்கள் என சுற்றுவதற்கு ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.
தத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங் செல்லலாம். பாராசெய்லிங், ஜெட் ஸ்கையிங் நீர் விளையாட்டுகள், ஸ்கூபா டைவிங், ஹாட் ஏர் பலுான் விளையாட்டுகளும் உள்ளன.
பரந்த புல்வெளியைத் தாண்டி அகோடா கோட்டைக்குள் நுழையும் போதே கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ள அகழியின் ஆழம் பிரமிப்பூட்டுகிறது.
அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் என்றாலும் ஆண்டில் எந்த மாதம் சென்றாலும் கடற்கரைகளின் அழகு குறையாது.
மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து கோவாவிற்கு விமானப்பயணம் அல்லது ரயில் பயணம் மேற்கொள்ளலாம். வடக்கு கோவா, தெற்கு கோவா என இரண்டு விமானநிலையங்கள் உள்ளன.