பொதுக்கழிப்பிடங்களால் உண்டாகும் சிறுநீர் தொற்று பாதிப்பை தவிர்க்க !
பலருக்கும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிவயிற்று வலி, அடிக்கடி குளிர் காய்ச்சல் என 'சிறுநீர்ப்பாதை தொற்று' ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக பொது இடங்களில் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது.
பணிபுரியும் இடங்களில் சுகாதாரமற்ற கழிப்பிடங்களால், சிறுநீர் கழிப்பதை பலரும் தவிர்க்கின்றனர்; சரிவர தண்ணீரும் குடிக்காததால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.
இதுபோன்ற தவிர்க்க முடியாத சூழலில் சிறுநீர் கழிக்க 'பெண்களுக்கான சிறுநீர் கழிக்கும் கப்' வாங்கி பயன்படுத்தலாம். ஆன்லைன் தளங்களில் இது ரூ.200க்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், வெஸ்டர்ன் டாய்லெட்களில் உட்காருவது தவிர்க்கப்பட்டு, நின்று கொண்டே சிறுநீர் கழிக்கலாம். தொற்று வாய்ப்பும் குறைவுதான். பயணங்களின் போதும் இதை பயன்படுத்தலாம்.
மூட்டு தேய்மானமுள்ள வயதான பெண்கள், நிறைமாத கர்ப்பிணிகளும் இதை பயன்படுத்தலாம். பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் முடிந்தளவு தொற்று பாதிப்பை தவிர்க்க பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வெஸ்டர்ன் வகையை தவிர்த்து இந்தியன் டாய்லெட்களை பயன்படுத்த வேண்டும்.