கொழுப்பை கரைக்க உதவும் சில இயற்கை உணவுகள்..!

04-பிப்-2026

நார்ச்சத்து நிறைந்த பசலைக்கீரை எடுத்து கொள்வது பசியை குறைப்பதோடு, திருப்தியை அதிகரிக்கும்.

04-பிப்-2026

வைட்டமின்கள், புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவான முட்டை, உடல் எடையை குறைக்க தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

04-பிப்-2026

ஆரஞ்சு பழத்திலுள்ள 'ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட்' உடலில் தேங்கும் சர்க்கரை கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. தினசரி உணவில் சேர்த்து கொண்டால், உடல் எடை குறைய துவங்கும்.

04-பிப்-2026

தக்காளியில் லைகோபின் இருப்பதால், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலின் எடையை குறைப்பதோடு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.

04-பிப்-2026

கொழுப்பு செல்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பூண்டு உதவுகிறது.

04-பிப்-2026

எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடல் செல்கள் சீராக செயல்பட உதவும்.

04-பிப்-2026

நட்ஸ் வகைகளில் எண்ணற்ற வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளன. உடல் நச்சுக்களை நீக்க உதவுவதுடன், திருப்தி அளவை அதிகரிக்கிறது.

04-பிப்-2026

வைட்டமின்கள் ஏ. சி, கே நிறைந்த ப்ரோக்கோலி, கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

04-பிப்-2026