ஒன்பது காரட் தங்கத்தை வாங்கலாமா?
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை எகிறி வரும் நிலையில், '9 காரட் ' தங்கம் வாங்கலாமா? என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய தர நிர்ணய அமைப்பின் ஹால்மார்க் பிரிவில் 9 காரட் நகைகளும் சேர்ந்துள்ள நிலையில், இப்படி ஒரு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
இதில், 37.5 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும்; மீதமுள்ள 62.5 சதவீதத்தில் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் இருக்கும்.
தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் போல் ஒன்றை அணிய விரும்புவோருக்காக, பேஷன் டிசைனர்கள் குறைந்த தரமுள்ள தங்கத்தில் பல ஆபரணங்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்த உருப்படிகளுக்கு மறுவிற்பனை மதிப்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை.
தங்கம் வாங்க வேண்டும் என விரும்பினால், 22 காரட் தங்கம் வாங்குங்கள் அல்லது தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்துவிட்டு, ஹாயாக இருக்கலாம்.