செப். 1-7 தேசிய ஊட்டச்சத்து வாரம்!

01-செப்-2025

இந்தியாவில் ஏற்படும் 56.4 சதவீதம் நோய்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் தான் காரணம் என ஆய்வு கூறுகிறது.

01-செப்-2025

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போல நலமுடன் இருப்பதற்கு இயற்கையான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

01-செப்-2025

ஆரோக்கியமான உடல்நலனுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து நமது மூளை, உடலமைப்பு மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

01-செப்-2025

இதற்கு வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கொழுப்புகள், நீர் மற்றும் கார்போஹைட்ரேட் இன்றியமையாததாக இருக்கிறது

01-செப்-2025

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரம் (செப். 1 - 7) கடை பிடிக்கப்படுகிறது.

01-செப்-2025

சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் இவ்வாரம் உதவுகிறது

01-செப்-2025

உணவில் பழங்கள், காய்கறி, புரதம், இறைச்சி என அனைத்து வித சத்துகளும் சமச்சீரான அளவில் இடம் பெறவேண்டும்.

01-செப்-2025

குறிப்பாக பாரம்பரிய இயற்கை உணவில் கவனம் செலுத்துவது நம் ஆரோக்கியதின் மேன்மைக்கு மிகவும் நல்லது.

01-செப்-2025