ஓணம் ஸ்பெஷல் நேந்திரன் பழ பிரதமன்!

05-செப்-2025

தேவையானவை: நன்கு கனிந்த நேந்திரன் பழம் - இரண்டு, வெல்லத்துாள் - 100 கிராம், தேங்காய்ப்பால் - ஒரு கப்

05-செப்-2025

ஏலக்காய்த்துாள் - கால் தேக்கரண்டி, முந்திரி, திராட்சை - தலா 10, பல்பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - நான்கு தேக்கரண்டி, நெய் - மூன்று தேக்கரண்டி.

05-செப்-2025

செய்முறை: நேந்திரன் பழத்தை தோலுடன் இரண்டாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

05-செப்-2025

ஆறியதும் தோலை உரித்து, இரண்டாக நறுக்கி, நடுவே உள்ள விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். அதனுடன், சிறிதளவு தண்ணீர் விட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத் தெடுக்கவும்.

05-செப்-2025

வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும்.

05-செப்-2025

அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, தேங்காய்த் துண்டுகளை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

05-செப்-2025

அதே நெய்யில், அரைத்த பழ விழுதை சேர்த்து கிளறி, வெல்லக்கரைசல், ஏலக்காய்த்துாள் சேர்த்து கொதிக்க விடவும்.

05-செப்-2025

அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த்துண்டுகளை மேலாக அலங்கரித்து பரிமாறவும்.

05-செப்-2025