குகைக்குள் டிரெக்கிங் செய்ய ரெடியா? ஒடிசா அரசு அறிமுகம்

27-பிப்-2025

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் மஹாநதி கரையோரம் 350 சதுர கி.மீ., பரப்பில் டெப்ரிகர் சரணாலயம் உள்ளது. இதனருகே ஹிராகுடா அணையும் வனத்துறை பராமரிப்பில் உள்ளது.

27-பிப்-2025

இங்கிருந்து 2 மணி நேரம் பயணித்தால் பழங்கால குகைகள் உள்ள பீமா மண்டலி பகுதி வரும். இவை 30,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

27-பிப்-2025

இந்த குகைகளில் மான், யானை ஆகிய விலங்குகளின் சிற்பங்கள், பல்வேறு விலங்குகளின் கால் தடங்கள், தேன்கூடு வடிவங்கள் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன.

27-பிப்-2025

இவற்றை சுற்றுலா பயணியர் சிரமமின்றி பார்வையிட புதிய சுற்றுலா திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

27-பிப்-2025

டெப்ரிகர் சரணாலயம் துவங்கி பீமா மண்டலி குகைகள் வரை இது ஒரு நாள் பயண திட்டமாகும்.

27-பிப்-2025

இதில் ஹிராகுடா அணை, சமலேஸ்வரி கோவில், சம்பல்பூர் உயிரியல் பூங்கா ஆகியவற்றை காணலாம்.

27-பிப்-2025

இயற்கையை ரசிப்பதுடன், 1 கி.மீ., குகைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் டிரெக்கிங் செய்யலாம்.

27-பிப்-2025