மிக அவசியமானது புரதச்சத்து!

18-மார்-2025

புரதங்கள் வாழ்வதற்கு அவசியம். இவை செல்லினுள் நொதிகளாக இருப்பதால் உடலின் அனைத்து செல்களுக்கும் முக்கியமானது. தண்ணீருக்குப் பிறகு, உடலில் மிகுதியாக இருக்கும் பொருளாகும்.

18-மார்-2025

இவை அமினோ அமிலங்கள் எனும் சிறிய பொருட்களால் ஆன, நீண்ட சங்கிலி போன்ற மூலக்கூறுகள். இவை பெப்டைட் எனும் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

18-மார்-2025

இவை நம் உடலிலுள்ள திசுக்களை வளர்க்கவும், பராமரிக்கவும், மாற்றவும் செய்கின்றன. எனவே நமது தசைகள், உறுப்புகள், நோயெதிர்ப்பு அமைப்புகள் பெரும்பாலும் புரதத்தால் ஆனவை.

18-மார்-2025

புரதம் ஜீரணிக்கப்பட்டவுடன், அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலங்கள் தசைகள், எலும்புகள், ரத்தம், உடல் உறுப்புகளைப் பராமரிக்கப் பயன்படுகிறது.

18-மார்-2025

அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தானது. இது கல்லீரல், சிறுநீரகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடையையும் கூட்டும்.

18-மார்-2025

இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள், முட்டை, சோயா ஆகியவற்றில் முழுமையான புரதங்கள் உள்ளன. முழுமையற்ற புரதங்களில் விதைகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கும்.

18-மார்-2025

சில உணவுகளிலுள்ள புரதங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஏனெனில் புரதத்தின் அமைப்பு நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஓர் எதிர்வினையை உண்டாக்கும்.

18-மார்-2025

முட்டையின் புரதமே மிக உயர் தரமான புரதம் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள். சில சாதாரண புரத உணவுகளை விட அதிக அளவு பூச்சிகளில் உள்ளன. எதிர்காலத்தில் இதுவே புரதத் தேவையைத் தீர்க்கும்.

18-மார்-2025