இன்று உலக ஆசிரியர்கள் தினம்
உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்., 5ல் கொண்டாடப்படுகிறது.
மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள்.
இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணரச்செய்யும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாணவர்களை எதிர்கால சமுதாயத்தில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு.
மாணவர்களும் தங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.
'கற்பித்தலை ஒருங்கிணைந்த பணியாக மறுவடிவமைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப் 5ல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.