இன்று உலக சிக்கன நாள்!

30-அக்-2024

சேமிப்பை வலியுறுத்தி அக். 30ல் உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது.

30-அக்-2024

1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது அக்டோபர் 31ஆம் தேதியை உலக சிக்கன தினமாக அறிவித்தனர்.

30-அக்-2024

இருப்பினும் 1984ல் அக். 31ல் நம் நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்தியாவில் அக்., 30ல் உலக சிக்கன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

30-அக்-2024

சிக்கனம் இருந்தால் தான் சேமிக்க முடியும் என்பதே யதார்த்தமான உண்மை.

30-அக்-2024

வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாது. எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம். சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது அவசியம்.

30-அக்-2024

சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல. மின்சாரம், உணவு, குடிநீர், இயற்கை வளங்கள் என பலவற்றை உள்ளடக்கியது.

30-அக்-2024

சிக்கனமும் சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது.

30-அக்-2024