இன்று உலக மூல நோய் தினம்!

20-நவ்-2025

மூலம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 20ல் உலக மூல நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

20-நவ்-2025

மலக்குடலில் உள்ள சுருக்கு தசையின் உட்பக்கம் இருக்கக்கூடிய சிறு அறைகள், புடைத்து வீங்குவதால் மலக்குடலில் மூலம் உருவாகிறது.

20-நவ்-2025

மரபியல் பிரச்னை, கர்ப்பக்காலம், உடல் பருமன், அதிக சூடு, அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், போன்ற பல்வேறு காரணங்களினால் மூலநோய் ஏற்படலாம்.

20-நவ்-2025

மூல நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் பாதிப்பு அதிகமாகி, அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குக் கொண்டு போய்விடும். உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் அதை சீராக்க முடியும்.

20-நவ்-2025

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

20-நவ்-2025

காய்கறி, பழங்கள், கீரைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.

20-நவ்-2025

நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், தூக்கமின்மை போன்ற பழக்கம் இருந்தால் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.

20-நவ்-2025

மைதா உணவு பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்கள் போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படும். அதனால் அவற்றை தவிர்க்கவும்.

20-நவ்-2025