இன்று சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்

22-மே-2026

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது.

22-மே-2026

பல்லுயிரிகள் இருந்தால் தான், சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து உள்ளோம்.

22-மே-2026

பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

22-மே-2026

'உலகளாவிய தாக்கத்திற்காக உள்ளூரில் செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

22-மே-2026

17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு, பூமி பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது.

22-மே-2026

நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு தான் 'பல்லுயிர் பரவல்'. பூமியில் 10 லட்சம் விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.

22-மே-2026

தற்போது பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. இதன் காரணமாக, பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

22-மே-2026

உலகளவில் பலவகையான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் வாழத் தகுதியாக இருக்கும்.

22-மே-2026