இன்று உலக சிட்டுக்குருவி தினம்
அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பறவைகளுக்கு உகந்த நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல் என்பது இந்தாண்டின் மையக்கருத்து.
பறவைகளில் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி.
இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
ஆனால் தற்போது பெருகிவிட்டநகரமயமாக்கலாலும், வயல்வெளிகள் வீட்டு மனைகளாக்க பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.
அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சிட்டுக் குருவி உள்பட அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.