குட்டீஸ்களுக்கு பிடித்தமான மாம்பழ குல்பி
பால் - 1/2 லிட்டர், மாம்பழம் - 1.5 கப், சர்க்கரை - 1/2 கப், இனிப்பில்லாத கோவா - 3 டீஸ்பூன், சோளமாவு - 4 டீஸ்பூன்
பாதாம் மற்றும் பிஸ்தா - 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை,
குங்குமப்பூவை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து தனியே வைக்கவும்.
பாலை நன்றாக கொதிக்கவிட்டு 3ல் 1 பங்கு அளவுக்கு வற்ற விடவும். அதில், இனிப்பில்லாத கோவாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் சோளமாவை சேர்த்து கிளறிவிட்டு கால் கப் சர்க்கரையை சேர்க்கவும்.
மாம்பழங்களை பொடியாக நறுக்கி, கால் கப் சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
ஒரு பவுலில் அரைத்த மாம்பழம், குங்குமப்பூ, பால் கலவை ஆகியவற்றை நன்றாக கலக்கவும். பின், நறுக்கிய பிஸ்தாவை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
இந்த கலவையை அச்சில் ஊற்றி குறைந்தப்பட்சமாக 8 மணி நேரத்துக்கு ப்ரீசரில் வைத்தெடுத்தால் சுவையான, சில்லென்ற மாம்பழ குல்பி ரெடி.