இன்று பென்குயின் விழிப்புணர்வு தினம்

20-ஜன-2026

பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்டவற்றால் பென்குயின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

20-ஜன-2026

இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன.20ல் உலக பென்குயின் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

20-ஜன-2026

பென்குயின் ஒரு பறக்காத பறவை. ஆனால் மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் நீந்தும். இது நீந்துவதே பறப்பதைபோல தோன்றும்.

20-ஜன-2026

வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்கே செலவழிக்கிறது.

20-ஜன-2026

அண்டார்டிகா உட்பட கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதிகள் இவை வாழ்வதற்கு ஏற்ற இடங்கள்.

20-ஜன-2026

இந்த தினம் பென்குயின்களைப் போற்றுவதற்கும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உதவும்.

20-ஜன-2026