102 குகைக்குள் சுவாரஸ்யமான ரயில் பயணம்

05-செப்-2025

ஹிமாச்சல் தலைநகர் சிம்லா. இது சராசரி கடல் நீர் மட்டத்திலிருந்து 7467 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்று.

05-செப்-2025

ஹரியானாவின் கல்காவிலிருந்து மலைவாசஸ்தளமான சிம்லாவுக்கு பொம்மை ரயில் போக்குவரத்து உள்ளது.

05-செப்-2025

இந்த ரயில் பாதையில் 102 சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்தியாவில் அதிகமாக சுரங்கப் பாதைகள் இருப்பது இங்கு தான்.

05-செப்-2025

மேலும், இங்கு 912 வளைவுகள், 969 பாலங்கள் உள்ளன. சராசரி வேகம் மணிக்கு 25 - 30 கி.மீ., ஆகவுள்ளது.

05-செப்-2025

இமயமலை மலைகள் வழியே அழகிய பள்ளத்தாக்குகள், பனிமூட்டமான புல்வெளிகள் மற்றும் சுரங்கங்கள் என மூச்சடைக்க வைக்கிறது இந்த பாரம்பரிய பொம்மை ரயில் பயணம்.

05-செப்-2025

இந்த கல்கா- சிம்லா ரயில் பாதை, வரலாறு மற்றும் பொறியியல் சிறப்புக்காக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

05-செப்-2025

ஆங்கிலேயர் ஆட்சியில் கோடைக்கால தலைநகராக சிம்லா இருந்ததால், இந்நகருக்கு ரயில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

05-செப்-2025