அளவுக்கு அதிகமானால் தர்ப்பூசணியும் கெடுதல்

26-பிப்-2025

உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கு கோடை காலம் தான் சிறந்தது. விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

26-பிப்-2025

கோடை காலத்தில் அதிக தாகம் எடுக்கும். அதற்காக எல்லா நேரமும் தண்ணீர் மட்டுமே குடிக்க முடியாது. அதற்கு பதிலாக, இளநீர், மோர், நுங்கு போன்றவற்றை அதிகம் எடுக்கலாம்.

26-பிப்-2025

தக்காளி, தர்ப்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில், சிவப்பு நிறத்தை தரும் 'லைக்கோபின்' என்ற வேதிப் பொருள், ஹார்ட் அட்டாக், கேன்சரை தடுக்கும்; உடல் எடையையும் குறைக்கும்.

26-பிப்-2025

தினசரி 100 - 150 கிராமுக்கு அதிகமாக தர்ப்பூசணி சாப்பிட்டால் நீர்ச்சத்து அதிகமாகும். இதுவும் உடலுக்கு நல்லதல்ல.

26-பிப்-2025

புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளோடு, நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறையும்.

26-பிப்-2025

95 சதவீதத்திற்கும் மேல் நீர்ச்சத்து அடங்கியுள்ள வெள்ளரிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதால், உடல் எடை குறையும்.

26-பிப்-2025

பால் பொருட்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற பொதுவான கருத்துக்கு விதிவிலக்கு பனீர். இதில், 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வறுத்து, பொரிக்காமல் அப்படியே சமைத்து பயன்படுத்தலாம்.

26-பிப்-2025