சிறு வயது உடல் பருமனை தவிர்ப்பது எப்படி?

15-நவ்-2024

இன்றைய பரபரப்பான உலகில் பெரும்பாலான குழந்தைகள் சந்திக்கும் பிரச்னையாக உடல் பருமன் உள்ளது.

15-நவ்-2024

மரபியல் காரணிகள், உணவின் அளவு, பெற்றோரின் கவனிப்பின்மை, உடற்பயிற்சியின்மை உட்பட பல்வேறு காரணங்களால் உடல் பருமன் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

15-நவ்-2024

உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்க வேண்டும். உயரத்தைவிட உடலின் எடை அதிகமாக இருந்தால் அதுவே 'ஒபிசிட்டி' எனப்படுகிறது.

15-நவ்-2024

சிறு குழந்தைகளாக இருந்தபோது மேற்கொண்ட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் வளர்ந்த பிறகு தொடர்வதில்லை.

15-நவ்-2024

இதுதவிர, டிவி, ஸ்மார்ட்போன், வீடியோ கேம்ஸ் என வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பதும், உடல்பருமனுக்கு காரணமாக அமைகிறது.

15-நவ்-2024

அதிகரிக்கும் உடற்பருமனானது, அவர்களின் மேற்படிப்பு, பணி, என எதிர்காலத்திலும் பிரச்னைகளைக் தரக்கூடும். மேலும், இதர உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது.

15-நவ்-2024

எனவே, குழந்தைகளின் உடல் எடை அதிகமாகிறது என தெரிந்தால் முறையான உணவுப் பழக்கம், சரியான நேரத்தில் உண்பது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

15-நவ்-2024

உடற்பயிற்சி செய்தல், தன் வயது பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் ஆகியவற்றை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

15-நவ்-2024

உடல் எடையைக் குறைக்க மருத்துவ சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்றெண்ணி, முறையற்ற மற்றும் போலி மருத்துவம் போன்றவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும்.

15-நவ்-2024

ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவு முறையே இதற்கான தீர்வு என்பதையும் மறக்கக் கூடாது.

15-நவ்-2024