ஹெல்த்தியான பசலைக்கீரை மசியல் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: பசலைக்கீரை - 1 கட்டு, பாசிப்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - 1, காய்ந்த மிளகாய் - 5

சீரகம், பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

தொடர்ந்து, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் பாசிப்பருப்பு மற்றும் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.

சுத்தம் செய்து நறுக்கிய பசலைக்கீரையை அதில் போட்டு வேக வைக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

இப்போது சுவையான பசலைக்கீரை மசியல் தயார். சாதத்துடன் பிசைந்த சாப்பிட ஏற்றது. அனைத்து வயதினரும் விரும்புவர்.