சானிட்டரி நாப்கின்களால் இவ்ளோ பாதிப்புகளா...?

28-மார்-2026

சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்பன் போன்றவை பஞ்சுகளால் தயாரிக்கப்பட்டாலும், பருத்தி வளர்ச்சிக்காக தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தோலுக்கு பாதிப்பை தரும்.

28-மார்-2026

இதேபோல், வெள்ளை நிறத்தில் நாப்கின்களை தயாரிக்க ப்ளீச்சிங் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, பித்தலேட்டுகள், ஆவியாகும் கரிம கலவைகள் என பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

28-மார்-2026

பெண்களின் பிறப்புறுப்பு பகுதி மிகவும் மென்மையான சவ்வுகளைக் கொண்டதால், இந்த ரசாயனங்களை எளிதில் உறிஞ்ச வாய்ப்புள்ளது.

28-மார்-2026

இதனால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

28-மார்-2026

அதேப்போல், டேம்பன்களை பயன்படுத்தும் போதும், டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாகும் அபாயமுள்ளது.

28-மார்-2026

இதனால், அதிக காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், வாந்தி, உறுப்பு செயலிழப்பு, விரைவான சுவாசம், தலைவலி, போதிய சிறுநீர் உற்பத்தியின்மை, மனக்குழப்பம் போன்றவை ஏற்படலாம்.

28-மார்-2026

மேலும், இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும்.

28-மார்-2026

எனவே, இதற்கு மாற்றாக பாரம்பரிய தயாரிப்புகளை பயன்படுத்தலாம். இவற்றில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் எதுவுமில்லாததால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்.

28-மார்-2026

அவற்றை உடனுக்குடன் துாக்கி எறியத் தேவையில்லை. அவற்றை துவைத்து, சுத்தப்படுத்தி, நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

28-மார்-2026