இளம் சாம்பியன் குகேஷ் சாதனை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலக்கல்

'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் சாம்பியன் ஆன இளம் வீரர் ஆனார் இந்தியாவின் குகேஷ். தவிர உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான மோதலில் களமிறங்கும் இளம் வீரர் ஆனார்.

'கேண்டிடேட்ஸ்' சாம்பியன் குகேஷ், அடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற, நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுடன் 31, மோத உள்ளார்.

தவிர இப்போட்டியில் பங்கேற்க உள்ள இளம் வீரர் (17 வயது) என்ற பெருமை பெற்றார். முன்னதாக 1984ல் ரஷ்யாவின் காஸ்பரோவ், 22 வயதில் பங்கேற்று இருந்தார்.

ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, ஆனந்துக்குப் பின், இப்போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ்.

சென்னையை சேர்ந்தவர் பள்ளி மாணவன் குகேஷ். இள வயதில் (12) கிராண்ட்மாஸ்டர் ஆன, இந்தியாவின் முதல், உலகின் மூன்றாவது வீரர் என பெருமை பெற்றவர்.

இளம் வயதில் கேண்டிடேட்ஸ் தொடரில் வென்று சாதனை படைத்ததால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

17 வயதில் வியத்தகு சாதனை படைத்த குகேஷிற்கு பாராட்டுகள். இளம் வயதில் இத்தகைய வெற்றி பெறும் முதல் வீரராக சாதித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். உலக சாம்பியன் பட்டம் பெற போராடும் இளம் வீரர் குகேஷிற்கு வாழ்த்துகள் - இந்திய செஸ் 'ஜாம்பவான்' ஆனந்த்