உடல் பருமனை குறைக்க உணவு அளவை குறைப்பதால் தீர்வு ஏற்படுமா?

உடல் பருமனை குறைக்க அதிகத் திறன் செலவழிக்கும் உடற்பயிற்சி முறைகளை பலர் மேற்கொள்கின்றனர்.

இதன் அலட்சியத்தால் நரம்பு சார்ந்த பாதிப்புகள், மாரடைப்பு போன்ற உடனடி பக்க விளைவுகளால் இளம் வயதினருக்கு பாதிப்பு அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க யோகா, இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றலாம்.

உணவை தவிர்ப்பது நிரந்தர தீர்வை கொடுக்காது. 3 நேர உணவை குறைக்காமல், எடுத்து கொள்ளும் உணவு வகைகளின் தரத்தை அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மித வேகத்தில் மேற்கொள்ளக்கூடிய மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள், உணவு பழக்கவழக்கங்கள் மூலமே எளிதாக்கலாம்.

பருமன் குறைப்பு மட்டுமின்றி முதுகு தண்டு வடம், மூட்டுகள் போன்ற உடல் பாக இணைப்புகளில் ஏற்படும் வலிகளுக்கும் தனித்தனியே ஆசனங்கள் உண்டு.

உண்ணும் உணவில் அதிக அளவில் சிறு தானியம், நட்ஸ், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை எடுத்து கொள்வது நல்லது.