நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

03-மார்-2024

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, ‛போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

03-மார்-2024

மேலும் இவர் ‛தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

03-மார்-2024

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அசத்தி வருகிறார்.

03-மார்-2024

தற்போது அவருக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

03-மார்-2024

இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 1ம் தேதி மும்பையில் இருவீட்டாரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க நடந்துள்ளது.

03-மார்-2024

இந்தாண்டுக்குள் திருமணம் நடக்கும் என்றும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

03-மார்-2024

வரலட்சுமியும், நிகோலய் சச்தேவ்வும் கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர்.

03-மார்-2024