இன்று சர்வதேச இடம்பெயர்வோர் தினம்

18-டிச-2025

ஆண்டுதோறும் டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

18-டிச-2025

இத்தினம் முறையாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உரிய மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்துகிறது.

18-டிச-2025

மேலும் சமூக, பொருளாதார, கலாச்சாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அந்தந்த நாடுகள் செயல்படுத்த அறிவுறுத்துகிறது.

18-டிச-2025

உலகளவில் இடம்பெயர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, 2000ம் ஆண்டு ஐ.நா., சபையால் இத்தினம் உருவாக்கப்பட்டது.

18-டிச-2025

உலகம் முழுவதும் 20 கோடி பேர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம்.

18-டிச-2025

இதில் சுமார் 3 கோடி பேர் அவர்கள் குடியேறி இருக்கும் நாடுகளால் அங்கீகாரம் பெறாமல் உள்ளனர்.

18-டிச-2025

சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ அல்லது அகதியாகவோ இன்னொரு நாட்டுக்குச் செல்வோர் இருக்கின்றனர்.

18-டிச-2025

சலுகைகள்மற்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை ஒவ்வொரு அரசும் செயல்படுத்த முன்வரவேண்டும்.

18-டிச-2025

இதே போல, நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

18-டிச-2025