வீட்டிலேயே ஈஸியாக தயாரிக்கலாம் பிரியாணி மசாலா...!
எத்தனை வகை பிரியாணி சாப்பிட்டாலும் பாய் வீட்டு பிரியாணி என்றாலே அது தனி சுவைதான்.
இருந்தாலும் அப்படி மற்ற பிரியாணிகளில் கிடைக்காத சுவை இதில் மட்டும் கிடைக்க என்ன காரணம்..? இதோ ரெசிபி...
தேவையானப் பொருட்கள்: பட்டை - 20 கிராம், ஏலக்காய் - 20 கிராம், கிராம்பு - 15 கிராம், கல் உப்பு - 1 ஸ்பூன்.
மசாலா பொருட்களை 2 நாட்கள் வரை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால், குறைவான தணலில் சிறிதளவு சூடாகுமாறு வறுத்தாலே போதுமானது. தணலை அதிகரித்தால் வாசனை மாறிவிடும்.
சூடு ஆறியபின், மிக்ஸி ஜார் அல்லது பிளெண்டரில் அனைத்தையும் போடுங்கள். இறுதியாக கல் உப்பு 1 ஸ்பூன் சேர்த்து நன்கு பொடியாக அரைத்தால் பிரியாணி மசாலா ரெடி.
1 கிலோ பிரியாணிக்கு 1 டீஸ்பூன் இந்த மசாலாப் பொடியை சேர்க்க சுவை அள்ளும்.