தோல் முதல் சளி பிரச்னைக்கு கற்பூரவள்ளி சிறந்த தேர்வு!

கற்பூரவள்ளி காரத்தன்மை மற்றும் நீர்ச் சத்து நிறைந்துள்ள ஒரு மூலிகையாகும். பல்வேறு உடல் உபாதைகளுக்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தரப்படும் மருந்தாக இது அமைகிறது.

வெறுமனே கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

படை, சொறி, அரிப்பு போன்ற தோல் பிரச்னைக்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளி பாதிக்கப்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

அதேபோல் இதன் இலை சாற்றின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும்.

கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி கரைந்தோடும்.

ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து. மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும். மேலும் சுருங்கியுள்ள மூச்சுக் குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும்.

கற்பூரவள்ளி செடியின் இலையில் கொதிக்க வைத்து தேநீர் போல் அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் தீரும்.