குடல் ஆரோக்கியம் காக்கும் 8 உணவுகள்

புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டும்; செரிமானத்தை மேம்படுத்தும்.

பூண்டை அடிக்கடி சாப்பிட குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. நோயைத் தூண்டும் பாக்டீரியாக்களைக் குடலில் வளர விடாமல் அழிக்கும்.

ஆப்பிள்களில் நிறைந்துள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்துக்கும் இஞ்சி வழிவகுக்கிறது.

நார்ச்சத்து நிரம்பிய பாதாம் செரிமானத்துக்கு உதவுவதுடன் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

வெங்காயத்திலுள்ள இன்யூலின் சேர்மங்கள் குடலை பலப்படுத்துகின்றன. கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.

வாழைப்பழத்திலுள்ள ப்ரீபயாடிக்குகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பார்லி அரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இதிலுள்ள நார்ச்சத்து குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கெட்டக்கொழுப்பை கரைப்பதோடு, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.