நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்
கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.