சென்னை மெரினா கடற்கரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூங்கில்களால் ஆன ஹார்டின் வடிவம் வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.