சென்னை பாரிமுனை ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாணவிகளின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கையில் மெஹந்தி அலங்காரத்தில் மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.