அ நிறம் | அளவு
ஈரோடு: குமாரபாளையம் எக்ஸல் மகளிர் இன்ஜினியரிங் கல்லூரியில் இந்திய கணினி சேவை மாணவியர் சங்க துவக்க விழா நடந்தது.கல்வி நிறுவன துணைத்தலைவர் மதன்கார்த்திக் தலைமை வகித்தார்.
கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கல்வி இயக்குனரக சென்னை இயக்குனர் கமாண்டர் முருகேசன் சிறப்பாளராக கலந்து கொண்டார். எக்ஸல் மகளிர் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர் பொம்மன்னராஜா பேசினார். கணினி அறிவியல் துறை தலைவி குமாரி வரவேற்றார்.கல்லூரி விரிவுரையாளர் அகமதுஹரீஸ், இந்திய கணினி சேவை மாணவி சங்கங்களின் தலைவி, செயலாளர் மற்றும் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். தகவல் தொழில்நுட்ப துறைத்தலைவி நிர்மலா தேவி நன்றி கூறினார். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கமலக்கண்ணன், எக்ஸல் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனர் இன்ஜினியர் செங்கோட்டையன் உள்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


