ADDED : ஆக 04, 2010 03:43 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் அருகே சொத்து தகராறில் தந்தை அடித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி கோடிக்கரை பகுதியை சேர்ந்தவர் ராமன்(65). இவருக்கு சொந்தமான நிலத்தை பங்கு போட்டு கொடுப்பதில் தந்தை ராமனுக்கும், மகன் வெங்கடேஷூக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.சொத்து பிரித்து கொடுப்பது சம்பந்தமாக ராமனும், வெங்கடேஷூக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே, வெங்கடேஷன் தந்தையை தாக்கியுள்ளார். கராத்தே மாஸ்டரான வெங்கடேஷின் தாக்குதலில் நிலைகுலைந்து போன, ராமன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து இறந்தார். இதுசம்பந்தமாக கொண்டலாம்பட்டி போலீஸார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து இருந்தனர். ராமனின் உடலை பிரேதபரிசோதனை செய்ததில், அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சொத்து தகராறில் தந்தையை அடித்து கொலை செய்த வெங்கடேஷை கொண்டலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


