/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் பத்து யூனியன்களில் 20ம் தேதி வரை ஏற்பாடு

கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் பத்து யூனியன்களில் 20ம் தேதி வரை ஏற்பாடு

ADDED : ஆக 04, 2010 03:42 AM


Google News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பத்து யூனியன் அலுவலகங்களில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நாளை முதல் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.ஈரோடு மாவட்டம் கல்விக்கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்கிறது.

இந்தாண்டு தொழிற்கல்வி மற்றும் மேல்படிப்புக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.மாணவ, மாணவியர் கல்லூரிகளை தேர்வு செய்து, கல்லூரியில் சேரும் நிலையில் உள்ளனர். கல்விக்கடன் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஈரோடு மாவட்டத்தில் பத்து இடத்தில் கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது.





அம்மாபேட்டை பகுதி மாணவர்களுக்கான முகாம் நாளை அம்மாபேட்டை யூனியன் அலுவலகத்திலும், வரும் 6ம் தேதி அந்தியூர் யூனியன் அலுவலகம், 10ம் தேதி பவானி யூனியன் அலுவலகம், 11ம் தேதி ஈரோடு யூனியன் அலுவலகம், 12ம் தேதி பெருந்துறை யூனியன் அலுவலகம், 13ம் தேதி கோபி யூனியன் அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. கோபி யூனியன் அலுவலகத்தில் நடக்கும் முகாமில், கோபி, நம்பியூர், தூக்கநாயக்கன் பாளையம் யூனியன்களை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.



வரும் 17ம் தேதி சத்தியமங்கலம் யூனியன் அலுவலகத்தில் நடக்கும் முகாமில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி யூனியன் பகுதி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 18ம் தேதி மொடக்குறிச்சி யூனியன் அலுவலகத்திலும், 19ம் தேதி சென்னிமலை யூனியன் அலுவலகத்திலும், 20ம் தேதி கொடுமுடி யூனியன் அலுவலகத்திலும் கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.மாணவ, மாணவியர் முகாமுக்கு வரும் போது, படிப்பு கட்டண விபரம், கடைசியாக படித்த படிப்பின் மதிப்பெண் சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிடச்சான்று கொண்டு வர வேண்டும்; நகல் போதுமானது.முகாம் நடக்கும் இடத்தில் முன்னோடி வங்கி மேலாளர், வங்கி கிளை அதிகாரிகள் மற்றும் யூனியன் அலுவலர்கள் மனுக்களை பெற்றுக் கொள்வர். மாணவ, மாணவியர் வரவில்லை என்றால், பெற்றோர் தேவையான அத்தாட்சியுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். மனுவை பெற்றுக் கொள்ளும் வங்கி அதிகாரிகள், மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல் தருவர். வட்டார அளவில் முகாம் நடப்பதால், மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் சுடலைகண்ணன் தெரிவித்துள்ளார்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்