/உள்ளூர் செய்திகள்/சேலம்/சோளக்காட்டில் புகுந்த பெண் மான்

சோளக்காட்டில் புகுந்த பெண் மான்

ADDED : ஆக 04, 2010 03:39 AM


Google News

சேலம்: சேலம் அருகே பனமரத்துப்பட்டி சந்தைத் தெருவில் புகுந்த புள்ளி மானை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஜருகு மலையில் ஏராளமான புள்ளி மான்கள், முயல்கள், வெள்ளை எலிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.

இக்காட்டில் வசித்து வரும் புள்ளி மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது அடிக்கடி நடந்து வருகிறது.நேற்று காலை பனமரத்துப்பட்டி சந்தை தெருவில் உள்ள விவசாய சோழகாட்டுக்குள் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் புகுந்தது. இதுகுறித்து வனக்குழு தலைவர் கனகராஜ், சேலம் சேர்வராயன் தெற்கு வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட வன அலுவலர் கந்தசாமி உத்தரவின் பேரில், சேர்வராயன் தெற்கு வன சரகர் பன்னீர் செல்வம் ஆலோசனையின் படி வனவர் நீலமேகம், வனக்காப்பாளர் கந்தசாமி ஆகியோர் புள்ளி மானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.சோளக்காட்டிற்குள் ஆட்கள் நடமாட்டம் வருவதை அறிந்த புள்ளி மான், அங்கும் இங்குமாக ஓடியது. சில மணி நேரம் போராடி வனத்துறையினர் புள்ளி மானை மீண்டும் ஜருகு மலைப்பகுதிக்குள் விரட்டினர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்