/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இந்தியா முழுவதும் வரி விகிதம் சீராக்க வலியுறுத்தல்

இந்தியா முழுவதும் வரி விகிதம் சீராக்க வலியுறுத்தல்

ADDED : ஆக 04, 2010 03:38 AM


Google News

ஈரோடு: அனைத்து மாநிலங்களும் வரி விகிதத்தை ஒரே விகிதமாக அமைக்க வேண்டும் என வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள மனு:பொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2011 மூலம் கலால் வரி, மதிப்பு கூடுதல் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி ஆகிய அனைத்து வரிகளையும் ஒன்று சேர்த்து, உள்ளீட்டு வரி வரவு எடுக்க வழிவகை செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும்; வரி ஏய்ப்பு குறையும். உணவுப் பொருட்களின் மீதான வரி நான்கு சதவீதம் மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் வரி விகிதத்தை ஒரே விகிதமாக அமைக்க வேண்டும். சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில், வரிவிலக்கு பத்து லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர வேண்டும். தங்க நகைகள் மீது தற்சமயம் உள்ள ஒரு சதவீதம் வரியே தொடர வேண்டும். உயர்மட்ட குழுவில் தொழில், வணிக கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்