சேலம்: சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது.சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் நோரா நிருபர்களிடம் கூறியதாவது:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அருளன்னை ஆன்மாரியால் 200 ஆண்டுகளுக்கு முன் குளூனி புனித சூசையப்பர் சபை உருவாக்கப்பட்டது.
இப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 6 மற்றும்7ம் தேதிகளில் நடக்கிறது. முதல்நாள் நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி., திலகவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 7ம் தேதி வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வெங்கடேசன், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜா, மேயர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினர்.


