/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோபி பள்ளியில் ஆசிரியர் தட்டுப்பாடு

கோபி பள்ளியில் ஆசிரியர் தட்டுப்பாடு

ADDED : ஆக 04, 2010 03:35 AM


Google News

கோபிசெட்டிபாளையம்:கோபி பெரியகொறவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லாததால், மாணவ மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது.கோபி பஞ்சாயத்து யூனியன் நாகதேவம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள பெரியகொறவம்பாளையத்தில் நடப்பாண்டு முதல் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

நடராஜபுரம் காலனி, வடக்கு காவேரிபாளையம், சின்னகுறவம்பாளையம், வெள்ளை பெரிச்சி புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் என இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடம் காலியாக உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்க்கு முக்கிய பாடங்களான கணக்கு, ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை சரிவர நடத்த முடியவில்லை.



முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியரும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தலைமையாசிரியரும் மட்டுமே பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களும் விடுமுறையில் செல்லும் போது பள்ளியில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படுகிறது.'கிராமப்புற பகுதியான பெரியகொறவம்பாளையம் நடுநிலை பள்ளிக்கு விரைவில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பஞ்சாயத்து தலைவர் சாந்தி, பி.டி.ஏ., தலைவர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்