/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சோலையாறு நீர்மட்டம் 123 அடியாக உயர்வு

சோலையாறு நீர்மட்டம் 123 அடியாக உயர்வு

UPDATED : ஆக 04, 2010 05:11 AMADDED : ஆக 04, 2010 03:25 AM


Google News

வால்பாறை : வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்த நிலையில் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 123 அடியாக உயர்ந்தது.வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்குப்பருவ மழை பெய்துவருகிறது.

இதனையடுத்து சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான அக்காமலை, சின்னக்கல்லார், கீழ்நீராறு, வெள்ளமலை, நடுமலை, கெஜமுடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  வால்பாறை டவுன் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக் டேம் கடந்த மாதம் நிரம்பியது.சோலையாறு அணையின் நீர்மட்டமும், தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அப்பர்ஆழியாறு மற்றும் காடம்பாறை அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக மழைப்பொழிவு குறைந்து காணப்படுகிறது.



இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. வால்பாறையில் மழைப்பொழிவு குறைந் துள்ள நிலையில் சோலையாறு அணையின் நீர்மட்டம் 160 அடி உயரத்தில் நேற்று காலை 123.48 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 749 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  அணையிலிருந்து மானாம் பள்ளி பவர் ஹவுஸ் வழியாக பரம்பிக்குளத்திற்கு 803 கன அடி தண்ணீரும், கேரள சோலையாறுக்கு 674 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. வால்பாறையில் நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வால்பாறை - 2, மேல்நீராறு - 1, கீழ் நீராறு - 1.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்