செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பி. ஏரிக்கரையில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில் கடந்த 39 ஆண் டாக ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. மிளகாய் பொடி அபிஷேகம், ஆனி காலனி அணிவது, அலகு குத்தி லாரிகளை தொங்கியும், இழுத்தும் வருவது என கடுமையான நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத் துகின்றனர். விழாவின் போது பக்தர் களுக்கு பலரும் தாங்க ளாக முன்வந்து அன்னதானம், மோர் போன்றவற்றை வழங்குகின்றனர். இதே போல் செஞ்சியை சேர்ந்த விஜயகாந்த் அனுதாபிகள் சிலர் கடந்த 8 ஆண்டாக திருவிழாவின் போது அன்னதானம் வழங்கி வருகின்றனர். இக்குழுவில் கடந்த ஆண்டு செஞ்சி எல்.டி. பேங்க் தெருவைச்சேர்ந்த சலீம் என்கிற முஸ்லிம் இளைஞரும் நண்பராக இணைந் தார். கடந்த ஆண்டு நடந்த அன்னதானத்தின் போது தானும் ஒருவராக நிதி வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இவர்கள் இந்தாண்டும் அன்னதானம் வழங்க உள்ளனர். இதற்காக பக்தர் களை வரவேற்று கோவில் அருகே டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இதில் சலீமின் பெயரும், போட்டோவும் இடம் பெற்றுள்ளது.வரலாற்று காலத்தில் செஞ்சியை ஆண்ட இந்து மன்னன் ராஜாதேசிங்கும், அவரது நண்பன் மகமத் கானும் இணை பிரியாத நண்பர்கள். செஞ்சி படைக்கு மகமத் கான் தளபதியாக இருந்தார். செஞ்சிக்கு எதிராக ஆற்காட்டு நவாப் நடத்திய போரில் ராஜா தேசிங்கும், மகமத் கானும் வீர மரணம் அடைந்தனர். இவர்களின் நட்பு செஞ்சியின் வரலாற்றில் இன்று வரையில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கும், நட்புக்கும் எடுத் துக்காட்டாக உள்ளது.இந்து கடவுளான முருகர் கோவில் விழாவுக்கு பக்தர்களை வரவேற்று சலீம் தனது நண்பர்களுடன் இணைந்து வைத்துள்ள வரவேற்பு பேனர் செஞ்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.


